
இயக்குநர் ஃபி்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய டார்க் காமெடி திரைப்படம் உருவாகிறது.
ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரதீப் காளி ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ரமேஷ் திலக், தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.