கடன் வாங்கியவர்களை மிரட்டுவது, திட்டுவது மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை தருவதைத் தவிர்க்குமாறு வங்கி வசூல் முகவர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, வங்கி வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.