
லக்னோவில் நடைபெற்ற யுபிடி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில், லக்னோ பால்கன்ஸ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீரட் மேவரிக்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மீரட் அணியின் திவ்யான்ஷ் ஜோஷி 40 பந்துகளில் 105 ரன்கள் குவித்து, யுபிடி20 லீக் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
முதலில் பேட்டிங் செய்த மீரட் மேவரிக்ஸ் 203 ரன்கள் எடுத்த நிலையில், லக்னோ பால்கன்ஸ் அணி 16 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.