
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க, இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், அர்ஜென்டினாவை 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி, மற்றொரு போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புரோ லீக் போட்டியில் இந்தியா 0-8 மற்றும் 2-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.