
அமெரிக்காவின் வாஷிங்டனில் காஷ்மீரைச் சேர்ந்த 42 வயதான இந்திய வம்சாவளி திரைப்பட இயக்குநர் அரபாத் ஷேக்கை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு கைது செய்துள்ளது.
அவர் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் விசாவில் அமெரிக்கா சென்று, 2020-ம் ஆண்டு அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது குடிவரவு விண்ணப்பம் பரிசீலனையில் உள்ள நிலையில், அவர் தற்போது வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள கரோலின் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.