
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் அத்துமீறலுக்கு எதிரான காட்சியைப் பாடகி சின்மயி பாராட்டியுள்ளார்.
திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இத்திரைப்படத்தில், 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்த விழிப்புணர்வு காட்சி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சராக இருக்கும் விஜய் போன்ற ஒரு நட்சத்திரம் இத்தகைய சமூக விழிப்புணர்வு கருத்தைப் பேசியது அவசியம் என சின்மயி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.