
மெய்யழகன் பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் பகத் பாசில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை சிவதா நடிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் குறித்த கூடுதல் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.