
உக்ரைனில் போர் தொடங்கிய பிப்ரவரி 2022 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில் 1,004 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆவணப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவங்களில் 89 சதவீதம் ரஷியத் தரப்பினராலும், 11 சதவீதம் உக்ரைனிய அதிகாரிகளாலும் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜெனீவாவில் உள்ள ரஷிய தூதரகக் குழு எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இது ரஷியாவின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.