இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 28-ஆம் தேதி நிலவரப்படி ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய சூழலில் தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் லேசான குறைவு தெரிந்தாலும், 7 மாகாணங்கள் இன்னும் அதிக ஆபத்தான நிலையில் உள்ளன.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.