
தமிழகம் முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கிண்டி தலைமை எலக்ட்ரிக்கல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஜி-பே மூலம் பரிமாறப்பட்ட ரூ.31.52 லட்சம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.2.6 லட்சம் கைப்பற்றப்பட்டது.
மொத்தமாக ஜி-பே மூலம் ரூ.89.89 லட்சமும், ரொக்கமாக ரூ.28.24 லட்சமும் சிக்கியுள்ள நிலையில், இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் அறிவித்துள்ளனர்.