
பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி ரூ.32 கோடி வசூல் செய்து பெரிய வெற்றி பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 21 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளதால், அவரது பழைய திரைப்படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.