Indian Politics
ஜல்லிக்கட்டு விவகாரம்: தவெக எம்.எல்.ஏ கருப்பையாவுக்கு சீமான் கண்டனம்

ஜல்லிக்கட்டு விவகாரம்: தவெக எம்.எல்.ஏ கருப்பையாவுக்கு சீமான் கண்டனம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஜல்லிக்கட்டை இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என சட்டப்பேரவையில் விமர்சித்த சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

2

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை இழிவுபடுத்திய கருப்பையா, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு நிதி கோருவதற்காக இத்தகைய கருத்துகளைக் கூறியது கண்டனத்திற்குரியது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

3

மதுக்கடைகளை மூடத் துணிவில்லாதவர்கள், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைச் சீரழிவு என்று கூறுவது அறியாமையின் உச்சம் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.