சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்த போது பிரதமர் மோடியிடம் 15க்கும் மேற்பட்ட முன்னணி புத்தொழில் முனைவோர்கள் தங்களின் யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மற்றும் விமானப் போக்குவரத்து சூழலை வலுப்படுத்துதல் குறித்து நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் விவரித்தனர்.
புத்தொழில் முனைவோர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, வளர்ந்து வரும் விண்வெளித்துறை போன்ற பல துறைகளுக்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.