
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கோஹட் மாவட்டத்தில் மசூதி அருகே வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது நடைபெற்ற இத்தாக்குதலில் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.