தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தன்னை தலைவராக அறிவித்த முதலமைச்சருக்கு அவர் தனது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் குறித்து ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.