சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவை வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் நியாயப்படுத்தியுள்ளார்.
திமுக ஆட்சியில் ஒன்றிய குழு மற்றும் நகராட்சி தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நிதி நெருக்கடி இருந்தாலும் பணி செய்ய இது ஏதுவாக இருக்கும் என்றார்.
மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.