
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை நிர்ணயித்து வருகின்றன.
சென்னையில் இன்று வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.