
கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் ரக்ஷிதா ராம்ராஜ் மற்றும் அஷ்மிதா சலிஹா அரையிறுதிக்கு முன்னேறினர்.
ரக்ஷிதா ராம்ராஜ் சக நாட்டு வீராங்கனை தன்வி ஷர்மாவை 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கிலும், அஷ்மிதா சலிஹா ஜப்பானின் ஹீனா அகாச்சியை 20-22, 21-15, 21-19 என்ற கணக்கிலும் வீழ்த்தினர்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் ரக்ஷிதா ராம்ராஜ் மற்றும் அஷ்மிதா சலிஹா ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.