
ஆசிய பெண்கள் கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ஈஸ்ட் பெங்கால் அணி குவாம் நாட்டின் ரோவர்ஸ் அணியை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்த போட்டியில் பிரியங்கா தேவி, அனோக்யே மற்றும் ஒபோகு தலா 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தனர்.
ஆசிய அளவிலான போட்டியில் அதிக கோல் அடித்து வென்ற இந்திய கிளப் அணி என்ற பெருமையை ஈஸ்ட் பெங்கால் பெற்றுள்ளதோடு, தற்போது 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.