
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மசவூகி கவுன்டியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், சந்தேக நபர் சாட் ஹிக்மேன் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
39 வயதான சாட் ஹிக்மேன் வெவ்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரை கொன்ற நிலையில், போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவரும் கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 3 பேர் உயிரிழந்த நிலையில் கண்டறிந்தனர், பின்னர் நீண்ட தேடுதலுக்குப் பிறகு குற்றவாளியைச் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.