
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தர் தடியடி விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவதாக பாஜக எம்.பி. சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு சபைகளும் எந்த அலுவல்களுமின்றி முடக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு நடந்தபோது மவுனம் காக்கும் எதிர்க்கட்சிகள், பாஜக மாநிலங்களில் மட்டும் அரசியல் செய்வதாக அவர் விமர்சித்தார்.