
தி ஹண்ட்ரட் தொடரின் 16-வது லீக் போட்டியில், லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிராக ஜோப்ரா ஆர்ச்சர் 20 பந்துகளை வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் லண்டன் ஸ்பிரிட் அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார்.
106 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய சதர்ன் பிரேவ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.