
டெல்லியில் நடைபெற்ற புளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கலந்துகொண்டு பேசினார்.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் எலான் மஸ்க்கிற்கு முன்பே தங்களின் 'யூட்ல்சாட்' ஒன்வெப் செயற்கைக்கோள் தொலைதொடர்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைதொடர்பு சேவையைத் தொடங்க ஜியோ, ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.