
சென்னையில் வார விடுமுறைக்குப் பின் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,570-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,08,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மற்றும் உலக பங்குச் சந்தை செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையாகி வருகிறது.