
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் வன்னியரசு, மாணிக்கம் தாகூர், ஜி.கே.வாசன், அண்ணாமலை மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் இந்த தரக்குறைவான விமர்சனத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
அரசியல் நாகரிகத்தை மீறி குடும்பத்தை விமர்சிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், நயினார் நாகேந்திரன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.