
திராவிட இயக்கத்தின் பங்களிப்பை மறந்து வரலாறு தெரியாத இளைஞர்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் அமிர்தம் இல்ல திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பட்டதாரிகள் மற்றும் மருத்துவர்கள் உருவாக திராவிட இயக்கமே காரணம் என்று குறிப்பிட்டார்.
தவெக கட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்ததால் கோடிக்கணக்கான மக்களுக்கு துன்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.