
துபாயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ரிச்கீ பிராப்பர்டீஸ்', தனது நிறுவனத்தின் பெண் முகவராகப் பணியாற்றும் நடாலியா சாவேஸுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உரூஸ் காரைப் பரிசாக வழங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனத்தில் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,750 கோடி) சொத்துகளை விற்று அவர் சாதனை படைத்துள்ளார்.
நிறுவனத்தின் 3-ஆம் ஆண்டு விழாவின் போது 2026-ஆம் ஆண்டின் சிறந்த ஊழியருக்கான விருதைப் பெற்ற அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இக்கார் வழங்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.