
தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, வி த லீடர்ஸ் இயக்கத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி குடும்பத்தினரை இழிவுபடுத்தும் இத்தகைய மூன்றாந்தர அரசியல், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிப் போனது என அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து தனிப்பட்ட முறையில் தாயாரை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.