
மிசா காலத்து கொடுமைகளை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்றும், தவெக அமைச்சர்களுக்குள் கொள்கை முரண்பாடு நிலவுவதாகவும் விமர்சித்தார்.
பாஜகவை வீழ்த்த தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது தவறானது என்றும், தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்வு செய்வதே சாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.