இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை மொத்தம் 99,634 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 52.53 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.