
சென்னை அருகே உள்ள கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சிலின் 31-ஆவது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் கேரள முதலமைச்சர் சதீசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பகிர்வு, முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.