
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பார்க்ளே வங்கி, தனது மொத்த பணியாளர்களில் சுமார் 5 சதவீதமான 5 ஆயிரம் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆயிரம் பேரைப் பணிநீக்கம் செய்துள்ள வங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 4 ஆயிரம் பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளது.
வங்கி செயல்பாடுகளை எளிமைப்படுத்தி மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.