
அன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாம் பாகம், ஆகஸ்டு 7-ம் தேதி ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.
முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த சசிகுமார், இத்தொடரில் அனாகா, அபர்ணா தாஸ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.