
நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், 2026-27 பிபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 33 பந்துகளில் சதம் விளாசிய ஆலன், நடப்பு ஆண்டில் மட்டும் 97 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி வருவதால், அவருக்கு 6,00,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படலாம்.