கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலி உலாவருவது போன்ற போலி வீடியோவை உருவாக்கிய 25 வயது வாலிபர் ஈரண்ணா கைது செய்யப்பட்டார்.
வீடியோவை உண்மை என நம்பிய கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்காக வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவை 50 தோப்புக்கரணம் போட வைத்து, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.