டிஜிட்டல் ஆன்லைன் மோசடிகளால் பொதுமக்கள் இழக்கும் பணத்தை மீட்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி முதல் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், போலி இணைப்புகள் அல்லது போலி முதலீட்டுத் திட்டங்களால் இழக்கப்படும் தொகையில் 85 சதவீதம் வரை வங்கிகள் இழப்பீடாக வழங்கும்.
மொத்த இழப்பு ரூ.50,000-க்கு உட்பட்டதாகவும், இந்தச் சலுகையை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், அதிகபட்ச இழப்பீடு ரூ.25,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.