
ஸ்வீடனின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், 11,300 கிலோ எடை கொண்ட 'X1' என்ற பேட்டரி-எலக்ட்ரிக் விமானத்தை அமெரிக்காவின் பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
இந்த விமானம் 1,100 அடி உயரத்தில் 27 நிமிடங்கள் பறந்ததாகவும், இதற்கான மின்சாரச் செலவு 5 டாலருக்கும் குறைவு என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரம்பரிய விமானங்களை விட 40% செலவு குறையக்கூடிய இந்த 30 பேர் பயணிக்கக்கூடிய விமான சேவையை 2031-க்குள் வணிக ரீதியாகத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.