
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சித்தா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் கையில் வெட்டு கத்தியுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் லுக் டெஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் 173-வது படமான ‘தர்மன்’ தயாரிப்பு பணிகளை முடித்த பிறகு, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ளார்.