
ரஷ்யாவுடன் நடந்துவரும் சண்டையை முடிக்க உக்ரைன் தரப்பிலிருந்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான எண்ணம் வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிடிவாதம் பிடிப்பது போரை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்றும் புடின் - ஜெலன்ஸ்கி இடையேயான பகைமை அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா பில்லியன் கணக்கிலான டாலர்களை வழங்குவதை இனி வேடிக்கை பார்க்க முடியாது எனவும் டிரம்ப் தெரிவித்தார்.