
ஸ்கோடா கைலாக் எஸ்யூவியின் புதிய 'ஸ்போர்ட்லைன்' வேரியண்ட் ரூ.11.32 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1.0 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், 114 பிஎச்பி பவரையும் 178 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
பாரத் என்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ள இந்த காரின் மேனுவல் மாடல் ரூ.11.32 லட்சத்திற்கும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.12.32 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.