சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் இறக்குமதி வரி மாற்றங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த 12 முதல் 15 மாதங்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என உலக தங்க கவுன்சில் அறிக்கை எச்சரித்துள்ளது.