
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த விண்வெளி நிலையத்தின் முதல் அடுக்கை விண்ணில் ஏவுவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுகளுக்குப் பிறகு, மனிதர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான இந்த விண்வெளி நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.