
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்காக சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்விக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இந்த விவகாரம் அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தக ரகசியங்கள் தொடர்பானது என்பதால் ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது குறித்து வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.