தூக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் நீண்டகால மன அழுத்தம் ஆகியவை ஒருவரின் நினைவாற்றலை பெரிதும் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2021-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5.7 கோடி பேர் டிமென்ஷியா பாதிப்புடன் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறதி ஏற்பட்டால் அதை வயது காரணமாக ஏற்படும் சாதாரண பிரச்சினை என அலட்சியப்படுத்தாமல், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை மருத்துவர்களின் ஆலோசனையுடன் கண்டறிவது அவசியமாகும்.