
நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் பங்கேற்ற கால்பந்து அணி, சமீபத்தில் நடைபெற்ற மஹோகனி யூத் லீக் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.
வெற்றி தோல்வியை விட விளையாட்டில் உள்ள மகிழ்ச்சியே முக்கியம் என ஆத்விக்கின் தாயார் ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித் குமாரின் ரேசிங் பயணத்தை விளக்கும் ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணத் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.