
வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 250 டன் வெங்காயம் அழுகி வீணாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
NAFED மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாததால் பெறப்படவில்லை என்றும், அது காணாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வின் தீவிரத்தை உணராமல் அரசு மெத்தனமாக செயல்படுவதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.