
அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் புரொஜெக்டர் போன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாதனங்கள் பராமரிப்பின்றி வீணாகின்றன.
மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மின்னணு உபகரணங்கள் பழுதடைந்து கிடப்பதாகவும், சில சாதனங்கள் கல்வி அலுவலகங்களுக்கு இரவலாகச் சென்று மாயமாகியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அரசு வழங்கும் பள்ளி மற்றும் பராமரிப்பு மானியங்களைப் பயன்படுத்தி, முடங்கிக் கிடக்கும் மின்னணு சாதனங்களைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.