
இந்திய ரிசர்வ் வங்கி, 3 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட 'பல்க் டிபாசிட்'களுக்கான வட்டி நிர்ணய விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது, இவை அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
வங்கிகள் பல்க் டிபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10:00 மணிக்குள் தங்கள் இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்.
ஒரே வகை மற்றும் தொகை கொண்ட டிபாசிட்களுக்கு கிளை அல்லது வாடிக்கையாளர் அடிப்படையில் வெவ்வேறு வட்டி வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.