
சென்னையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை டி பிரிவு லீக் போட்டியில் ரயில்வேஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது.
இரண்டாவது இன்னிங்சில் ரயில்வேஸ் அணி 108 ரன்னுக்கு சுருண்ட நிலையில், தமிழகத்தின் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக ஆன்ட்ரே சித்தார்த் அரைசதம் அடித்து (56 ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருக்க, தமிழகம் இத்தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.