
இஸ்ரேல் தேர்தலுக்கு இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவ் நகர் மீது அணு குண்டு தாக்குதல் போன்ற AI படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ஈரானியர்கள் அணு ஆயுதங்களைப் பெற்றால் இஸ்ரேலுக்கு இருப்புக்கே ஆபத்தான அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், டிரம்ப்பின் பதவிக்காலத்தில் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் இந்த பதிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.